Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரஷ்யா தாக்கினால் பதிலடிக்குத் தயார் - நேட்டோ தளபதி எச்சரிக்கை!

ரஷ்யா தாக்கினால் பதிலடிக்குத் தயார் - நேட்டோ தளபதி எச்சரிக்கை!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள மூன்று கட்டத் திட்டத்தை அவர் விளக்கினார்.

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உடனடியாக எதிர்கொள்ள நேட்டோ கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அதன் ஐரோப்பியப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கெவிச் தெரிவித்துள்ளார்.

போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ரஷ்யாவுடன் போர் விரைவில் ஏற்படும் என்றோ, தவிர்க்க முடியாதது என்றோ தாம் கருதவில்லை என்று கூறினார். அதே நேரத்தில், தாக்குதல் நடந்தால் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.


ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள மூன்று கட்டத் திட்டத்தை அவர் விளக்கினார். முதலில் தாக்குதலைத் தடுப்பது, அது தொடர்ந்தால் எதிரிப்படையின் முன்னேற்றத்தை நிறுத்துவது, தேவைப்பட்டால் அதன் போரிடும் திறனை முறியடிப்பது ஆகியவை அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.


தாக்குதல் நடத்தும் படைகளை மட்டுமின்றி, அவற்றுக்கு ஆயுதங்கள், பொருட்கள் மற்றும் உத்தரவுகளை வழங்கும் அமைப்புகளையும் செயலிழக்கச் செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.


உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் போர்களிலிருந்து பெற்ற அனுபவங்களை நேட்டோ பயன்படுத்தும் என்றும் கூறினார். துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களுடன், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தக்கூடிய ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட கருவிகளையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


எந்தச் சூழலிலும் ரஷ்யாவின் நிலப்பகுதிகளைக் கைப்பற்ற நேட்டோ முயலாது என்று கிரின்கெவிச் தெளிவுபடுத்தினார். தாக்குதலை முறியடிப்பதே நோக்கம் என்றும், போரை விரிவுபடுத்தும் பொறுப்பு ரஷ்யாவையே சாரும் என்றும் கூறினார்.


ஐரோப்பாவின் முக்கிய இடங்களைச் சேதப்படுத்தும் முயற்சிகளில் ரஷ்யாவுக்குத் தொடர்புள்ளதாக ஜெர்மனி, எஸ்டோனியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அவரது பேச்சு வெளியாகியுள்ளது.


நேட்டோவுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்வதாகவும், ரஷ்யாவை ஒட்டிய கூட்டமைப்பின் கிழக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


உக்ரைனைத் தாண்டி மோதல் பரவக்கூடும் என்ற கவலை ஐரோப்பியத் தலைவர்களிடம் அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில், கூட்டமைப்பின் பாதுகாப்புத் தயார்நிலையையும் தாக்குதல் நடந்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் தளபதி விளக்கியுள்ளார். போருக்கான எச்சரிக்கையுடன், மோதல் தவிர்க்க முடியாதது அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி
கோயம்பேட்டில் ஆயுத பூஜை சந்தை - இன்று முதல் அக்.23 வரை!
அடுத்த செய்தி
Blackstone COO flags tech disruption, geopolitical conflicts as global risks

தொடர்புடைய செய்திகள்